
அமெரிக்க நாட்டில் அலபாமா டென்னஸ்சி எல்லைப் பகுதியில் நேற்று முன்தினம் மதியம் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த இருவரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த ஹெலிகாப்டர் ராணுவத்தின் தென்னஸ்சி நேஷனல் கார்டு பிரிவுக்கு சொந்தமானது என்று தகவல் கிடைத்துள்ளது. இந்த விபத்து நடந்த பகுதியில் கரும்புகை வான் உயரத்திற்கு எழுந்துள்ளது. மேலும் இந்த விபத்து ஹெலிகாப்டர் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டபோது ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.