விழாவில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி விஸ்டெக்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ. சஞ்சய் ஷா உயிரிழந்தார். ராமோஜி ஃபிலிம் சிட்டியில், அந்நிறுவனத்தின் 25ஆம் ஆண்டு விழா நடந்தது. அப்போது, விழா மேடையில் சஞ்சய் ஷா நின்றிருந்த இரும்பு கூண்டு, மேல் இருந்து கீழ் நோக்கி வந்தது. அப்போது கூண்டின் செயின் அறுந்து, 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்