
கேரளா மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு மாவட்டம் ஈங்காப்புலா சாலையில் நேற்று பிரியங்கா காந்தி பாதுகாப்பு வாகனங்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது 2 கார்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு குடும்பத்தினர் படுகாயமடைந்தனர்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரியங்கா காந்தி காரில் இருந்து கீழே இறங்கி வந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். உடனடியாக மருத்துவர்கள் வரவழைத்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன் பிறகு காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
En route from Kozhikode Airport to Kalpetta, AICC General Secretary Priyanka Gandhi MP stopped her convoy noticing a car accident in Eengappuzha. She called in a doctor from the convoy to examine the injured and provide them with first aid. @priyankagandhi continued her journey… pic.twitter.com/IC6eXgHGqn
— Congress Kerala (@INCKerala) May 4, 2025
இந்நிலையில் பிரியங்கா காந்தி விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய வீடியோவை கேரள காங்கிரஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.