
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தை சேர்ந்தவர் சரண்ராஜ் என்பவர் அம்பத்தூரில் வேலை பார்த்து வருகிறார். இதனால் தினம்தோறும் பெரியபாளையத்தில் இருந்து ஆவடி வழியாக வேலைக்கு சென்று வருவார். நேற்று சரண்ராஜ் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்ததால் சரண்ராஜ் கீழே விழுந்துள்ளார். பின்பு விழுந்த இடத்திலிருந்து சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு சரண்ராஜ் இழுத்துச் செல்லப்பட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சரண்ராஜை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சரண்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சரண்ராஜ் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.