விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாசு கட்டுப்பாடு வாரியம்  வெளியிட்டுள்ளது.

வருடந்தோறும் விநாயகர் சதுர்த்தியானது கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பல இடங்களில் விநாயகர் சிலைகளை வழிபாட்டிற்கு வைத்து 3 நாட்கள் கழித்து கடலில் கொண்டு சென்று கரைப்பது வாடிக்கையாகும்.

இந்நிலையில் சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் மட்டும் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே கரைக்க அனுமதி என மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது. சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத இரசாயன சாயம்/எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது உள்ளிட்ட பல வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.