ஜப்பான் அரசு, உளவு செயற்கைக்கோளான ஐஜிஎஸ் 7-ஐ விண்ணில் வெற்றிகரமாக செலுத்தி இருக்கிறது.

ஜப்பான், ரேடார் செயற்கைக்கோளான ஐஜிஎஸ்-7- உளவு செயற்கைக்கோளை ளான உருவாக்கப்பட்டது இது ரேடார் செயற்கைக்கோளாகும் இரவு நேரத்தில் மின்காந்த கண்காணிப்பு அமைப்புடனும் வானிலை கடுமையாக இருக்கும் சமயங்களில் படங்களை பிடிக்கும் என கேவிடன் செயற்கைக்கோள் புறனாய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

46 எச்2ஏ எனும் ராக்கெட்டில் இந்த செயற்கைக்கோள் பொருத்தப்பட்டு, ககோஷிமா
மாகாணத்தில் அமைந்திருக்கும் விண்வெளி மையத்திலிருந்து நேற்று அதிகாலை நேரத்தில் அனுப்பப்பட்டது. புறப்பட்ட 20 நிமிடங்களில் சுற்றுப் பாதையில் சரியாக நிலைநிறுத்தப்பட்டது.

ஐஜிஎஸ்- 5 செயற்கைக்கோளுக்கு பதிலாக இந்த செயற்கைக்கோளானது,  அனுப்பப்பட்டிருக்கிறது. வானிலை மோசமடைந்ததால் குறிப்பிடப்பட்ட நாளுக்கு, ஒரு நாள் தாமதமாக விண்ணில் செலுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது