
விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நாளை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் நடை பெற உள்ளது. இந்த நிலையில் திருப்பூர் மாநகரில் தமிழக வெற்றிக்கழகம் கட்சி சார்பில் நிர்வாகிகள் டிஜிட்டல் பேனர்கள் வைத்தனர். திருப்பூர் கரட்டாங்காடு பேருந்து நிறுத்தம் பகுதியில் இரு புறமும் பிரம்மாண்ட பேனர்கள் வைக்கப்பட்டது.
ஆனால் மர்ம நபர்கள் யாரோ பேனரை கிழித்து சேதப்படுத்தியுள்ளனர். நாளை மாநாடு நடைபெற உள்ள நிலையில் பேனர் அளிக்கப்பட்ட சம்பவம் நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் அங்கு குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.