
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நேற்று விக்கிரவாண்டியில் விமர்சையாக நடந்து முடிந்தது. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உணர்ச்சி பொங்க ஆவேசமாக பேசினார். அவர் அரசியல் கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். மாநாட்டில் விஜயின் கம்பீரமான பேச்சைக் கேட்டு தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர். விஜய் ஏ டீமும் இல்லை. பி டீமும் இல்லை. பாஜகவின் சீ டீம்.
நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக்கழகம் மாநாடு பிரம்மாண்ட சினிமா மாநாடு. அதிமுக பற்றி பேசினால் எடுபடாது என்பதால் திமுக பற்றி விஜய் பேசியுள்ளார். அதிமுகவின் வாக்குகளை ஈர்ப்பதற்காக அதிமுக பற்றி விஜய் பேசவில்லை. நேற்று விஜய் கூட்டிய கூட்டம் போன்று ஏற்கனவே திமுக நிறைய கூட்டம் நடத்தியுள்ளது. திராவிட மாடல் ஆட்சியை மக்களிடம் இருந்து பிரிக்க முடியாது. ஆளுநரை எதிர்த்து பேசினால் தான் தமிழகத்தில் ஈடுபடும் என அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.