விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் திருமாவளவன் இன்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பலமுறை ஆதவ் அர்ஜுனாவுக்கு அறிவுரை வழங்கிய போதிலும் அவரின்‌ சமீபத்திய பேச்சுகள் ஊறு விளைவிக்கும் வகையில் இருந்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். அதன் பிறகு, நூல் வெளியீட்டு விழாவில் விஜய் கலந்து கொண்டதில் எனக்கு எந்த விதமான வருத்தமும் சங்கடமும் கிடையாது. எங்களுக்கும் தமிழக வெற்றி கழகத்தினருக்கும் இடையே மோதலோ அல்லது சர்ச்சையோ ஏற்படவில்லை என்று கூறினார்.

மேலும் முன்னதாக அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விஜய் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாததற்கு திமுக கூட்டணியின் பிரஷர் தான் காரணம் என்று பகிரங்கமாக கூறினார். அதன் பிறகு ஆதவ் அர்ஜுனா தமிழகத்தில் மன்னராட்சி நீக்கப்படும் என்று திமுகவை கடுமையாக சாடி பேசினார். இதன் காரணமாகத்தான் ஆதவ் அர்ஜுனா மீது  விசிக நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்பிறகு விஜய் திருமாவளவனுக்கு கூட்டணி அழுத்தம் இருக்கிறது என்று கூறிய நிலையிலும் அவர் மீது எனக்கு எந்த சங்கடமும் கிடையாது என்றும் வருத்தம் கிடையாது என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.