தமிழக பாஜக கட்சியின் சார்பில் இன்று டாஸ்மாக் ஊழலை எதிர்த்து போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாஜக மூத்த தலைவர்கள் வீட்டிற்கு சென்று நேரடியாக அவர்களை கைது செய்தனர். டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகையிட பேரணி செல்ல இருந்த பாஜகவினரை கைது செய்து ஒரு இடத்தில் அடைத்து வைத்த நிலையில் தற்போது அது மிகப்பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. அதாவது நீண்ட நேரம் ஆகியும் போலீசார் விடுவிக்காததால் கோபத்தில் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதாவது தமிழிசை சௌந்தர்ராஜன் நாங்களா நாடகம் ஆடுகிறோம் மாலை 6 மணிக்கு மேல் பெண்களை சிறையில் வைக்க கூடாது என்பது ரூல்ஸ் எங்களுக்கும் சட்டம் தெரியும் ஆனால் நீங்கள் இவ்வளவு நேரம் கைது செய்து வைத்திருப்பது தவறு என்று ஆவேசமாக வாக்கு வாதம்செய்த நிலையில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையும் ரூல்ஸ் படி லேடிஸ் மாலை ஆறு மணிக்கு மேல் சிறையில் வைக்க கூடாது என்பதால் இவ்வளவு நேரமாக ஏன் வைத்துள்ளீர்கள் என்று போலீசார் உடன் கடும் வாக்குவாதம் செய்தார்.

இந்நிலையில் தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசி வரும் அண்ணாமலை விஜய் ஸ்கூல் பசங்க மாதிரி அரசியல் செய்கிறார். விஜய் போன்று நடிகையின் இடுப்பை கிள்ளிவிட்டு நான் அரசியல் செய்கிறேனா. நாடகம் போடுவது விஜய் தமிழக வெற்றி கழகம் தான் நாடகம் போடுகிறது. விஜய் வொர்க் ஃபிரம் ஹோம் பண்ண வேண்டாம். மேலும் விஜய்க்கு அரசியல் பற்றியும் மக்கள் பிரச்சனை பற்றியும் என்ன தெரியும் என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார். மேலும் முன்னதாக புஸ்ஸி ஆனந்த் டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் பாஜகவும் திமுகவும் சேர்ந்து நாடகம் ஆடுவதாக விமர்சித்து இருந்த நிலையில் தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகத்தான் அண்ணாமலை இப்படி கூறியுள்ளார்.