
பாஜக கட்சியின் நிர்வாகியும் நடிகருமான சரத்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது வரவேற்கத்தக்க ஒரு விஷயம்தான். நானும் அவரை போன்று உச்ச நடிகராக இருந்த போது தான் அரசியலுக்கு வந்தேன். அந்த சமயத்தில் மக்கள் என் படங்களை தியேட்டருக்கு கூட்டம் கூட்டமாக சென்று பார்த்தார்கள்.
நான் கட்சி தொடங்கிய போது இரு பெரும் தலைவர்களை தனி ஆளாக எதிர்த்தேன். அப்போது யாருக்கும் எதிர்க்க தைரியம் கிடையாது. உழைப்பு மற்றும் உறுதி இருந்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம். மேலும் நடிகர் விஜய் நீட் தேர்வு மற்றும் கவர்னர் பதவி உள்ளிட பல விஷயங்களில் புரிதல் இல்லாமல் பேசி உள்ளார் என்று கூறினார்.