நடிகர் தளபதி விஜய் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த செய்திகளால் சமீபகாலமாகத் தொடர்ந்து பேசுபொருளாகி வருகிறார். இதற்கிடையே, அவருக்கும் நடிகை த்ரிஷா கிருஷ்ணனுக்கும் இடையிலான உறவு குறித்து இணையத்தில் பரவலாக விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், அவர்களுக்கு ஆதரவாகப் பிரபல இயக்குநர் விக்ரம் பட் கருத்து தெரிவித்துள்ளார். தளபதி விஜய்யின் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் மற்றும் விவாகரத்து தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தின. இந்தச் சூழலில், நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாகத் தோன்றியது, நெட்டிசன்களிடையே விவாதங்களையும், விமர்சனங்களையும் கிளப்பியது.

இந்த விவகாரம் குறித்து இயக்குநர் விக்ரம் பட் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “மனிதர்களின் இதயம் சில நேரங்களில் தவறு செய்யக்கூடும். அது எங்கெல்லாம் மகிழ்ச்சியைத் தேடுகிறதோ, அங்கெல்லாம் பயணிக்கும். தற்போதைய சூழலில் விஜய் மற்றும் த்ரிஷா விஷயத்தில் எனக்கு ஒன்று மட்டும் சிறப்பாகத் தோன்றுகிறது; அது அவர்களின் நேர்மை. உறவுகளை மறைத்துக்கொண்டு போலியாக வாழ்வதை விட, தங்களின் உணர்வுகளை வெளிப்படையாக அணுகுவதில் ஒரு கௌரவம் இருக்கிறது. காதலை ஒரு குற்றமாகக்கருதி மறைத்து வாழத் தேவையில்லை,” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Vikram Bhatt (@thevikrambhatt)

தொடர்ந்து விமர்சிப்பவர்களைச் சாடியுள்ள விக்ரம் பட், “சமூகத்தில் பலர் வெளிப்படையாக ஒரு வாழ்வையும், அந்தரங்கமாக வேறொரு வாழ்வையும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். திரைக்குப் பின்னால் நடக்கும் இத்தகைய விஷயங்களை மறைத்துவிட்டு, பிறரது வாழ்க்கையை விமர்சிப்பவர்கள் பலர் உண்டு. நடிகர் விஜய் மற்றும் த்ரிஷாவுக்குத் தங்களின் வாழ்க்கை முறையைத் தீர்மானிக்கவும், காதலிக்கவும் முழு உரிமை உண்டு. அவர்களின் திரைப்படங்கள் மட்டுமே நமக்குச் சொந்தமானவை, அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை அல்ல,” என விக்ரம் பட் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சிமேலும் னிமா உலகில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் விஜய் மற்றும் த்ரிஷா குறித்த சர்ச்சைகளில், ஒரு பிரபல இயக்குநரே வெளிப்படையாக ஆதரவு தெரிவித்திருப்பது திரையுலக வட்டாரத்தில் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.