
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்த தி கோட் படம் ஐந்தாம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் கெஸ்ட் ரோல்லில் சிவகார்த்திகேயன் நடித்திருப்பார். இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தற்போது நடிகர் சிவகார்த்திகேயனுக்கு விஜய் கொடுத்த பரிசு தொடர்பான வீடியோவை வெளியிட்டு உள்ளது. அதில் விஜய் சிவகார்த்திகேயனுக்கு விலை உயர்ந்த கை கடிகாரத்தை பரிசாக வழங்கியுள்ளார். இதனை நடிகர் சிவகார்த்திகேயன் மிகுந்த மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.