தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி அரசியலில் களமிறங்கியுள்ளார். இவர் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ள நிலையில் தற்போது அதற்கான பணிகளை தொடங்கியுள்ளார். இந்த நிலையில் விஜய் இறுதியாக லியோ திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் தற்போது அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் வெளியாக உள்ளது.

இதனைத் தொடர்ந்து நடிகர் விஜயின் கடைசி படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்குவதாக அவரே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். விஜய் அரசியலில் குதித்துள்ளதால் அடுத்த படம் தான் கடைசி படம் என்று அறிவித்திருந்தார். இதனால் அந்த படத்தை இயக்கப் போவது யார் என்று பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் இந்த தகவலை எச்.வினோத் உறுதி செய்துள்ளார். மேலும் இது அரசியல் படம் இல்லை கமர்சியல் படம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.