கரூர் பொதுக்கூட்டத்தில் நடந்த அசம்பாவிதம் போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் மீண்டும் நடந்துவிடக் கூடாது என்பதில் தவெக தலைவர் நடிகர் விஜய் உறுதியாக இருப்பதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கூட்டங்களைச் சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் நிர்வகிப்பது குறித்துத் தொண்டர்களுக்குப் பயிற்சி அளிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

தவெகவுக்காக உருவாக்கப்பட்ட தொண்டர்களுக்கான சிறப்புப் பயிற்சி முகாம், கடந்த சில நாட்களாகக் சுங்குவார்சந்திரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

டிசம்பர் மாதம் விஜய் மீண்டும் தனது பரப்புரையைத் தொடங்க உள்ள நிலையில், இந்தத் தொண்டர் பயிற்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இப்பயிற்சியில் கலந்துகொள்ளும் தொண்டர்களுக்கு நவம்பர் 23-ஆம் தேதி அன்று விஜய் நேரடியாக வந்து அறிவுரைகள் வழங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.