தமிழக பாஜக கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நீட் தேர்வு நடைபெறாது என்று கூறினார்கள். ஆனால் அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஐந்தாவது முறையாக தற்போது நீட் தேர்வு நடைபெறுகிறது. திமுகவை எதிர்த்து நீட் தேர்வு நீட்டாக நடைபெறுகிறது. அதிமுக பாஜக கூட்டணியை பொறுத்தவரையில் எந்த அழுத்தமும் கிடையாது. ஆனால் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் தான் பிரஷர் இருக்கிறது.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஜாதி பாகுபாடு மற்றும் அரிவாள் கலாச்சாரமும் பெருகி வருகிறது. 3, 5, 8-ம் வகுப்பு பொது தேர்வுகள் பற்றி  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய் சொல்கிறார். மாணவர்களின் படிப்பில் அரசியலை கலக்காதீர்கள். பொய்யாமொழி என்று பெயர் வைத்துள்ள அமைச்சர் பொய் சொல்லாமல் உண்மையை சொல்ல வேண்டும். அதிமுக பாஜக கூட்டணியை பார்த்து திமுக பயப்படுகிறது. மேலும் விஜய், அதிமுக மற்றும் பாஜக ஆகியவைகள் திமுகவின் எதிர்ப்பு டீம் என்று கூறினார்.