தமிழக தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பில் இருக்கும் வேளையில், தவெக-வின் வெற்றிப் பயணத்தைத் தடுக்க திமுகவும் அதிமுகவும் ரகசியமாகக் கைகோர்க்க முயற்சிப்பதாக தவெக-வின் நிர்வாகி அருண்ராஜ் கிளப்பியுள்ள புகார் அரசியல் வட்டாரத்தில் வெடிகுண்டாக வெடித்துள்ளது.
செய்தியாளர்களைச் சந்தித்த அருண்ராஜ், “விஜய்யின் எழுச்சியைப் பொறுக்க முடியாமல், அவருக்கு எதிராக திமுகவும் அதிமுகவும் ஒன்று சேரப் பார்க்கிறார்கள்; இதையெல்லாம் மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், மக்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது” என்று ஓப்பனாகப் போட்டு உடைத்துள்ளார்.
108 இடங்களைப் பிடித்தும் பெரும்பான்மை கிடைக்காமல் தவெக திணறி வரும் சூழலில், இரு திராவிடக் கட்சிகளும் கூட்டணி அமைக்கப் போவதாக எழுந்துள்ள இந்தத் தகவல், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
