
விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு சிறப்பாக நடந்து முடிந்தது. இப்போது அரசியல் களத்தில் விஜய் பற்றி தான் பேச்சுகள் அடிபடுகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரான செல்வப் பெருந்தகை கூறியதாவது, இந்தியா கூட்டணி சிந்தாமல் சிதறாமல் அடுத்த தேர்தலை சந்திக்கும். தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் இல்லை. ராகுல் காந்திக்கும் விஜய்க்கும் நட்பு உள்ளது. நட்பு வேறு. அரசியல் வேறு என கூறியுள்ளார்.