கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகை விஜயலட்சுமியின் குற்றச்சாட்டுகள் குறித்து ஆவேசமான கருத்துக்களை தெரிவித்தார்.அதாவது என்னைக் கேள்வி கேட்கும் விஜயலட்சுமி என்ன அன்னை தெரசா வா? ஐரோம் ஷர்மிளாவா? அன்னிபெசன்ட் அம்மையாரா? என்னைப் பற்றி பேசுவதற்கு அவருக்கு என்ன தகுதி உள்ளது.

நான் மக்களுக்காக போராடவா இல்ல விஜயலட்சுமியை எதிர்த்து போராடவா என்று சீமான் பேசினார். மேலும் ராமநாதபுரத்தில் பிரதமர் மோடியை எதிர்த்து திமுக போட்டியிட்டால் நான் விலகிக் கொள்கிறேன் அந்த தொகுதியில் மட்டும் திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பேன் என கூறியுள்ளார்.