
விஜயதரணியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள X தள பதிவில், விஜயதரணி அவர்கள் மாற்று கட்சியில் இணைந்தது விட்டார். அவரை 3 முறை சட்டமன்ற உறுப்பினராக்கி அழகு பார்த்த விளவங்கோடு தொகுதி மக்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் செய்த மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார். எனவே மக்கள் அவரை ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள் என தெரிவித்தார். பாஜகவில் இணைந்ததால் காங்கிரஸில் இருந்து விஜயதரணி நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.