நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இன்று காலை 6.10 மணிக்கு உயிரிழந்தார் என்று மைத்துனர் சுதீஷ் தெரிவித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும் செயற்கை சுவாசம் வைக்கப்பட்டு இருப்பதாகவும் தேமுதிக தலைமை காலை 6 மணிக்கு அறிவித்தது. அதன் பிறகு சில நிமிடங்களிலேயே விஜயகாந்த் உயிர் பிரிந்துள்ளது. ஆனால் 8.50 மணி அளவில் தான் அவர் உயிரிழந்தார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக்கியது.