
இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18-வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் புள்ளி பட்டியலில் குஜராத் அணி முதலிடத்தில் இருக்கும் நிலையில், டெல்லி அணி இரண்டாம் இடத்திலும், பெங்களூர் அணி மூன்றாம் இடத்திலும், பஞ்சாப் அணி நான்காம் இடத்திலும் இருக்கிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணி ராஜஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். இந்த புள்ளி பட்டியலில் சென்னை அணியுடன் தோல்விக்கு பிறகு நான்காம் இடத்தில் இருந்த லக்னோ ஐந்தாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இந்நிலையில் லக்னோ அணியில் தற்போது மயங்க் யாதவ் இனைந்துள்ளார். அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான மயங்க் யாதவ் மீண்டும் அணியில் இணைந்ததை வீடியோ வெளியிட்டு அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் இவர் அடுத்த போட்டியில் களமிறங்கும் நிலையில் மீண்டும் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
⚡ 𝐌𝐀𝐘𝐀𝐍𝐊 ⚡ 𝐘𝐀𝐃𝐀𝐕 ⚡ 𝐈𝐒 ⚡ 𝐁𝐀𝐂𝐊 ⚡ pic.twitter.com/c0G5p3svMA
— Lucknow Super Giants (@LucknowIPL) April 16, 2025