இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா. இவரை கிரிக்கெட் ரசிகர்கள் சின்ன தல என அன்போடு அழைத்தனர். இவரை தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

இந்நிலையில் சுரேஷ் ரெய்னா தற்போது தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாக இருக்கிறார். அதாவது ட்ரீம் நைட் ஸ்டோரிஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படத்தில் சுரேஷ் ரெய்னா நடிகராக களமிறங்கும் நிலையில் இந்த படத்தை லோகன் என்பவர் இயக்க சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.

இந்த திரைப்படத்தின் அறிமுகம் வீடியோவை சிவம் துபே வெளியிட்ட நிலையில் தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. இது பற்றி சுரேஷ் ரெய்னா கூறும்போது தமிழ்நாட்டில் விசில் போடு ஆர்மி இருக்கிறது. நான் அங்கு பல போட்டிகளில் விளையாடியுள்ளேன். எனக்கு சென்னை கடற்கரையும் ரசமும் மிகவும் பிடிக்கும். அதனால்தான் தமிழ் படத்தில் நடிக்கிறேன். மேலும் தமிழ் மக்களின் அன்பு எனக்கு கிடைத்திருக்கிறது என்று கூறினார்.