அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஒரு பெண் தனது 11 வயது மகனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த சரிதா என்ற பெண் பிரகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த 2018-ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். இவர்களது 11 வயது மகன் தந்தை பராமரிப்பில் வளர்ந்து வந்தார். சரிதா தனது மகனை அவ்வபோது பார்த்து செல்வதற்கு மட்டுமே நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த நிலையில் மகன் டிஸ்னிலேண்ட் கேளிக்கை பூங்காவிற்கு செல்ல ஆசைபட்டான். இதனால் சரிதா தனது மகனுடன் மூன்று நாள் சுற்றுலா சென்றுள்ளார்.

அந்த விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். அப்போது சரிதா தனது மகனின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு போதைத் பொருள் உட்கொண்டு அவரும் தற்கொலைக்கும் முயன்றார். முன்னதாக போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துவிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சரிதாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். பின்னர் சிறுவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பேதுரு சோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.