ஒரு காலத்தில் தனது கணவர் எனக்கு எதிரியாக இருந்தார் என நடிகை மனிஷா கொய்ராலா கூறியுள்ளார். என் கணவர் என்னை ஒருபோதும் நேசித்ததில்லை, எனக்கும் அவரை பிடிக்கவில்லை. திருமணமான சில நாட்களிலேயே எனக்கு எதிரியாகிவிட்டார். ஒரு பெண்ணின் வாழ்க்கையில் இதைவிட மோசமானது வேறு என்ன இருக்க முடியும்? என வேதனை தெரிவித்துள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டில் சாம்ராட் தஹல் என்பவரை மணந்த மனிஷா கொய்ராலா ஆறு மாதத்தில் விவாகரத்து பெற்றார்.