லக்ஷ்மன் உடேகர் இயக்கி உள்ள “சாவா” படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் விக்கி கவுசல். நடிகர் ராஸ்மிகா. நடிகர் அக்ஷய் கண்ணா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். இந்த படம் காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று திரையரங்குகளில் வெளியானாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. முன்னதாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்ற போது இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானிடம் அவருடைய இசையை மூன்று எமோஜிக்களை கொண்டு விவரிக்குமாறு நடிகர் விக்கி கவுசல் கேட்டார். இதற்கு ஏ ஆர் ரகுமான் வாயை மூடிக்கொள்வது போல சைகை செய்தார்.

பின்னர் வாயை திறந்தால் என்ன நடக்கும் என்று தெரியும். கடந்த ஒரு வாரமாக பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்றார். இதைக்கேட்டு அங்கு இருந் பலரும் சிரித்தார்கள். அதாவது சமீபத்தில் youtuber ரன்வீர் அல்லாபாடியா என்பவர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சர்ச்சை கருத்துக்கு பலரும் கண்டணை தெரிவித்து வருகிறார்கள். அவர் மீது காவல்துறை வழக்கு பதிவும் செய்துள்ளனர் . மேலும் அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் உள்ளிட்டவருக்கு தேசிய மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியது.  மேலும் தன்னுடைய பேச்சுக்கு யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியா மன்னிப்பு கேட்டார். இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து ஏ ஆர் ரகுமானும் மறைமுகமாக கருத்து தெரிவித்துள்ளார்.