
தமிழகத்தில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி முறிவடைந்த நிலையில் இரு கட்சிகளுக்கு இடையே வார்த்தை மோதல் என்பது அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் சமீப காலமாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அண்ணாமலை இடையே வார்த்தை மோதல் என்பது அதிகரித்துவிட்டது. இந்நிலையில் நேற்று கோயம்புத்தூரில் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பாஜகவுக்கு அண்ணாமலை வந்த பிறகுதான் பலம் சேர்ந்தது போன்று அவர் ஒரு மாய பிம்பத்தை உருவாக்கியுள்ளார்.
அவர் இதுவரை மத்திய அரசிடம் இருந்து தமிழக மக்களுக்காக என்ன நலத் திட்டங்களை பெற்றுக் கொடுத்துள்ளார். தமிழக மக்களுக்காக எந்த நன்மையும் செய்யாத அண்ணாமலை வாயில் வடை சுடுகிறார் என்று கூறினார். இதற்கு பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, திமுக கட்சி கரயத் தொடங்கிவிட்டது. தன்னுடைய கட்சியை காப்பாற்ற முடியாத எடப்பாடி பழனிச்சாமி எனக்கு அறிவுரை வழங்க வேண்டிய அவசியம் இல்லை. சிலர் சுயநலத்துடன் செயல்படுவதால் அதிமுக கட்சி அழிந்து கொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமிக்கு நம்பிக்கை துரோகி என்ற பெயர் பொருத்தமாக இருக்கும். மேலும் அவர் மீது நம்பிக்கை வைத்த பிரதமர் மோடியின் முதுகிலேயே குத்தியவர் தான் எடப்பாடி பழனிச்சாமி என்று விமர்சித்துள்ளார்.