நெல்லையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் சென்னை வானிலை ஆய்வு மையம் தேவையில்லாத ஒன்று எனவும் அதை இழுத்து மூடவேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் சென்னை வானிலை ஆய்வு மையம் செய்யும் வேலையை 5ஆம் வகுப்பு மாணவன் கூட செய்வான் என காட்டமாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும், இது எங்களுக்கு தெரியாதா? சுதந்திரத்துக்கு முன்பு இருந்த நிலையே இப்போதைய வானிலை  மையத்திலும் தற்போதும் தொடர்கிறது என கூறியுள்ளார்.