
கனடாவில் ஜஸ்டின் ஸ்டீவன்சன் (46)-டேனியல் (32) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் சம்பவ நாளில் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வானத்தில் சூரியன் போன்று திடீரென ஒரு வெளிச்சத்தை கண்டனர். உடனடியாக அவர்கள் காரை நிறுத்தி அதை வீடியோவாக செல்போனில் எடுத்தனர்.
வானத்தில் நெருப்பு பிழம்புகள் போன்ற அருகருகே பிரகாசமாக அவைகள் மிளிர்ந்தது. அது பார்ப்பதற்கு பறக்கும் தட்டுகள் போன்று இருந்தது. இதை வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும் போது அவர்கள் உண்மையாகவே வேற்று கிரகவாசிகளை பார்த்து விட்டதாக கூறினர். வானத்தில் மொத்தம் 4 சூரியன்கள் மிளிர்வது போல் அவைகள் தென்பட்டன. மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது.
Are these UFOs or flares seen in Manitoba, Canada? 🛸🇨🇦 pic.twitter.com/zNYMvpn5oT
— Sky Fire News! (@SkyFireNews) June 28, 2024