
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோட்டகுப்பம் பகுதியில் அரசு ஊழியராக வேலை பார்க்கும் ஒரு 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்தப் பெண் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தன் குடும்பத்தினருடன் இருந்தார். அப்போது அவருக்கு வாட்ஸ் அப் காலில் வீடியோ கால் வந்தது. தெரியாத நம்பரில் இருந்து வந்ததால் அந்த பெண் அழைப்பை எடுக்கவில்லை. ஆனால் மீண்டும் அழைப்பு வந்ததால் அந்த பெண் whatsapp அழைப்பை எடுத்து பேசினார். அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அப்போது வாலிபர் ஒருவர் திடீரென ஆடைகளை கழற்றி விட்டு நிர்வாணமாக தோன்றினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கத்தி கூச்சலிட்டு தன் கணவரிடம் காட்ட வாலிபர் அழைப்பை துண்டித்து விட்டார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணும் அவருடைய கணவரும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அந்த செல்போன் நம்பர் மராட்டிய மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டதும் அவருடைய வாட்ஸ் அப் டிபியில் ஒரு நடிகையின் போட்டோ இருப்பதும் தெரியவந்த நிலையில் அது ஒரு மோசடி அழைப்பு என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது இதுபோன்று நிர்வாணமாக தோன்றி பெண்களை ஏமாற்றி பணம் பறிக்கும் மோசடி கும்பலின் வேலை என்பது தெரியவந்த நிலையில் காவல்துறையினர் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.