உலகம் முழுவதும் கோடி கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினந்தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி வாட்ஸ் அப் பயணங்கள் தங்கள் நண்பர்கள் ஆன்லைனில் இருக்கிறார்களா என்பதை ஏற்கனவே அறிய முடியும். சம்பந்தப்பட்ட நபரின் சுயவிவரத்தை கிளிக் செய்யும் போது அவர்கள் ஆன்லைனில் இருக்கிறார்களா இல்லையா என்பதை அறிந்து கொள்ளலாம். தற்போது வாட்ஸ் அப் புதிய வசதியை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த புதிய வசதியின் படி யார் சமீபத்தில் ஆன்லைனில் இருந்தார்கள் என்பதை பார்க்க முடியும். இந்த வசதி தற்போது சோதனை முறையில் உள்ளது.