உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயணர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ் அப் நிறுவனம் தொடர்ந்து தினந்தோறும் புதுவித அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் புதிய பயன அனுபவம் தரும் user interface வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த புது வசதியை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டு பயனாளர்களும் பெறும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் message yourself feature, search by date feature, drag and drop ஆகிய வசதிகளை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்த வசதிகளில் முக்கிய சிறப்பு வசதிகளும் உள்ளன. அதாவது search by date, drag and drop ஆகிய இரண்டு வசதியின் படி நாம் தினமும் அனுப்பும் மெசேஜ் எந்த தேதியில் அனுப்பப்பட்டது என தெரிந்து கொள்ள முடியும். அதன் மூலமாக நமது பழைய டேட்டாவை தேவைப்படும் நேரத்தில் எடுத்துக் கொள்ளலாம்.

இதற்கு முதலில் வாட்ஸ் அப் செயலியில் சென்று search box என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் வலது பக்கம் calendar போன்ற icon ஐ கிளிக் செய்ய வேண்டும். அதில் காலண்டர் ஆப்ஷனை கிளிக் செய்தவுடன் உங்களுக்கு வருடம் மற்றும் மாதம் வாரியாக விவரங்கள் வரும். அதன் பிறகு தேட வேண்டிய வருடம் மற்றும் தேதியை கிளிக் செய்து jump to date என்று கொடுத்தால் அந்த தேதியில் நீங்கள் செய்த மெசேஜ் மற்றும் போட்டோ ஆகிய விவரங்கள் அனைத்தும் வரும்.