உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பயனாளர்களுக்கு ஒரு புது வசதியை கொண்டுவந்துள்ளது வாட்ஸ்ஆப்.

அதன்படி வாட்ஸ்அப்பில், கருத்துக்கணிப்பு(poll) என்ற புது அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கருத்துக் கணிப்புகளில் ஒற்றை வாக்கு முறையை தேர்ந்தெடுக்கும் போது, ஒரு பயனர் ஒரு வாக்கை மட்டுமே செலுத்த முடியும். கருத்துக் கணிப்புகளைத் தேடவும், அவற்றின் முடிவுகளையும் அறியும் வகையில் புது அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர புகைப்படம், வீடியோக்களை ஃபார்வர்டு செய்யும்போது அதிலிருக்கும் கேப்ஷன்களை அப்படியே வைக்கவும், நீக்கவும், மாற்றி எழுதவும் ஆப்சன் கொடுக்கப்பட்டுள்ளது.