இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அதன்படி வங்கிக்கு செல்லாமலேயே சேமிப்பு வங்கி கணக்குகளை திறக்க முடியும் என எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. இதற்கு எஸ்பிஐ இணையதளத்தில் சேமிப்பு கணக்கு என்ற ஆப்ஷனுக்கு சென்று தேவையான விவரங்களையும் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு மூன்று அல்லது ஐந்து நாட்களுக்குள் வேலை முடிக்கப்பட்ட சேமிப்பு கணக்கு திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.