
சென்னையிலிருந்து கொல்லத்துக்கு நேற்று பயணிகளை ஏற்றிக்கொண்டு எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று புறப்பட்டது. இந்த ரயில் உளுந்தூர்பேட்டை மற்றும் விருத்தாச்சலத்துக்கு இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது 7 மாத கர்ப்பிணி ஒருவர் திடீரென ரயிலில் இருந்து தவறி விழுந்தார். உடனடியாக உறவினர்கள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்துள்ளனர். அதன்பிறகு ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்ட நிலையில் உறவினர்கள் கீழே இறங்கி பெண்ணை தேடியுள்ளனர். ஆனால் அந்தப் பெண் கிடைக்காததால் ரயில் அங்கிருந்து புறப்பட்டது.
இந்த ரயில் விருத்தாசலத்திற்கு வந்த பிறகு உடனடியாக பெண்ணின் உறவினர்கள் அங்கு பாதுகாப்பில் நின்ற காவல்துறையினரிடம் நடந்ததை கூறினர். உடனடியாக காவல்துறையினர் சம்பத்தப்பட்ட இடத்திற்கு சென்று தேடினார். அப்போது கர்ப்பிணி பெண் இறந்த நிலையில் கிடந்தது தெரிய வந்தது. அந்தப் பெண்ணின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இந்நிலையில் இந்த தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கஸ்தூரி (22) என்ற பெண் உயிரிழந்தது தெரியவந்தது. இவருக்கு சுரேஷ்குமார் என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு ஞாயிற்றுக்கிழமை வளைகாப்பு நடைபெற இருந்ததால் அவர் தன்னுடைய சொந்த ஊருக்கு ரயிலில் சென்றுள்ளார். அவர் சாப்பிட்டுவிட்டு கை கழுவதற்காக சென்றபோது வாந்தி எடுத்துள்ளார். அப்போது திடீரென ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.