டிஆர்டிஓ விஞ்ஞானி ஒருவர் உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படையால் (ஏடிஎஸ்) கைது செய்யப்பட்டுள்ளார். புனேவை சேர்ந்த DRDO விஞ்ஞானி பிரதீப் குருல்கர், ஒரு பெண்ணுடன் 6 மாதங்கள் நெருக்கமாக இருந்த நிலையில், இந்திய பாதுகாப்பு ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கடத்தியுள்ளார். இதை கண்டுபிடித்த மகாராஷ்டிர ATS அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் வாட்ஸ்அப் மூலம் ரகசியங்களை பகிர்ந்தது தெரியவந்தது.

அவர் இன்னும் 6 மாதங்களில் ஓய்வு பெற இருந்தார். செப்டம்பர் மற்றும் அக்டோபர் 2022-க்கு இடையில் வாட்ஸ்அப் மற்றும் வீடியோ அழைப்பு மூலம் விஞ்ஞானி பாகிஸ்தான் ஏஜென்டுடன் தொடர்பில் இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.