தற்போது திருப்பதி திருமலையில் பக்தர்கள் கூட்டமானது குவிய தொடங்கியுள்ளது. கோடை விடுமுறை தொடங்கி விட்டதால் பல பகுதிகளில் இருந்தும் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். இதனால் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் நிலவுகிறது. இதனால் விஐபி தரிசனம் சில மணி நேரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு சாமானிய பக்தர்களுக்கான முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலமாக சமூகத்தில் பின்தங்கிய, மாற்றுத்திறனாளி குழந்தைகள் ஆயிரம் பேரை வரும் 25ஆம் தேதி தரிசனத்திற்கு இலவசமாக அழைத்துச் செல்ல உள்ளதாக தமிழ்நாடு புதுச்சேரி மாநில ஆலோசனை குழு தலைவர் சேகர் ரெட்டி தெரிவித்துள்ளார்