வருமான வரியானது பழைய விகிதம் மற்றும் புதிய விகிதம் என இரண்டு அடிப்படையில் வசூலிக்கப்படுகிறது. இதில் யார் யாருக்கு எது சிறந்தது என்று நிபுணர்கள் யோசனை தெரிவித்துள்ளனர். அதாவது பழைய விகிதத்தில் 5 லட்சம் ரூபாய் வரையும், புதிய விகிதத்தில் 7 லட்சம் ரூபாய் வரையும் வரி செலுத்த வேண்டாம். பழைய விகிதத்தில் 5 லட்சத்திற்கு கீழ் ஆண்டு வருமானம் ஈட்டினால் அரசு 12500 சலுகை வழங்குகிறது.

புதிய வரி விகிதத்தில் இது எதுவும் கிடையாது. புதிய விகிதத்தில் கழிவுகள் 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பழைய விகிதத்தில் வீட்டு வாடகை, காப்பீடு, சேமிப்பு, ஓய்வூதியம், வீட்டுக் கடன் வட்டி, அறக்கட்டளை மற்றும் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்து இருந்தால் அதை காட்டி கழிவுகள் பெறலாம். அதனால் அதிக கழிவுகள் இருப்போருக்கு பழைய விகிதமும் கழிவுகள் இல்லாதோருக்கு புதிய விகிதமும் சிறந்தது என்று பொருளாதார நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.