இந்தியாவில் 2023-24 ஆம் நிதி ஆண்டுக்கான பச்சைக் அறிக்கையை சமீபத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் வருமான வரி உச்சவரம்பு 7 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. பிரிவு 87 ஏ இன் கீழ் விலக்கு போடுவதற்கான அதிகபட்ச வருமான வரம்பு அடிக்கடி மாற்றியமைக்கப்பட்ட வரும் நிலையில் இதற்கு முன்பு வருமான வரி உச்சவரம்பு 5 லட்சம் ரூபாயாக இருந்த நிலையில் இதில் சில திருத்தங்கள் செய்யப்பட்ட தற்போதைய 7 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஏழு லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் எந்த வரியும் செலுத்த தேவையில்லை. அது மட்டுமல்லாமல் வருமான வரி ரிபேட் அம்சம் மூலமாகவும் மக்கள் பயனடைய முடியும். இந்த அம்சம் என்றால் ஒரு நிதியாண்டில் வருமானவரித்துறைக்கு செலுத்த வேண்டிய தொகையை விட அதிகமாக நீங்கள் வரி செலுத்தும் போது அதனை திரும்பப்பெறும் முறையாகும். வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளதால் இதன் மூலம் ஏராளமான மக்கள் வரை தள்ளுபடி பெற வாய்ப்பு உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.