ஆகஸ்ட் மாதம் முடிவடைந்து நாளை செப்டம்பர் மாதம் பிறகு இருக்கிறது. இந்த நிலையில் இந்த மாதம் வரி திட்டமிடல் நிதி நிர்வாகத்தின் இன்றமையாக ஒரு பகுதியாகும். இதனால் வரி செலுத்துவதற்கான முக்கிய செய்திகளை நாம் கட்டாயமாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். அந்த வகையில் செப்டம்பர் 2023 ஆம் வருடத்திற்கான வரி செலுத்த வேண்டிய தேதிகள் குறித்து பார்க்கலாம்.

செப் 7: TDS/ TCS வைப்பு

செப் 7, 2023, ஆகஸ்டு 2023 இல் கழிக்கப்பட்ட/ சேகரிக்கப்பட்ட வரியை டெபாசிட் செய்வதற்கான காலக்கெடு ஆகும்.

செப் 14: TDS சான்றிதழ்

ஜூலை 2023 இல் பிரிவுகள் 194-IA, 194-IB, 194M மற்றும் 194S ஆகியவற்றின் கீழ் கழிக்கப்பட்ட வரிக்கான TDS சான்றிதழை வழங்குவதற்கான கடைசி தேதி செப்டம்பர் 14 ஆகும்.

செப்15: படிவம் 24G, அட்வான்ஸ் டேக்ஸ், படிவம் 3BB

அரசு அலுவலகம் படிவம் 24G ஐ வழங்க இது கடைசி தேதி ஆகும். மேலும்2024-25 மதிப்பீட்டு ஆண்டிற்கான முன்கூட்டிய வரியின் இரண்டாம் தவணையைச் செலுத்துவதற்கான கடைசித் தேதியும் இது தான்.

செப் 30: TDS சலான், தணிக்கை அறிக்கை, ITR, படிவம் 9Aபிரிவுகள் 194-IA, 194-IB, 194M மற்றும் 194S ஆகியவற்றின் கீழ் ஆகஸ்ட் 2023 இல் கழிக்கப்பட்ட வரி தொடர்பான சலான்-கம்-ஸ்டேட்மெண்ட்டை வழங்குவதற்கான கடைசி தேதி ஆகும்.