
மத்திய நிதி அமைச்சகம் வருமான வரி ரீபண்ட் பெறுவதில் புதிய விதிமுறையை அறிவித்துள்ளது. அதாவது தாமதமாக வருமான வரி செலுத்துபவர்கள் சுலபமான முறையில் ரீபண்ட் பெரும் நோக்கில் இந்த புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் ஜூலை 31ஆம் தேதிக்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது அவசியம். ஒருவேளை இந்த கால அவகாசத்தை தாண்டினால் அதற்குரிய காரணத்தை அவர்கள் கூற வேண்டும். இதில் விபத்து, வெள்ளம் மற்றும் இயற்கை பேரழிவு உள்ளிட்ட காரணங்களால் வருமானவரி தாக்கல் செய்வதற்கு கால தாமதமானால் அவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும்.
அதேசமயம் இவர்கள் அதிகமாக கட்டிய வரியை திரும்ப பெறுவதில் சிக்கல் நேரிடலாம். இதற்கு எளிய முறையில் தீர்வு காண்பதற்காக வருமான வரி விண்ணப்பத்தை பரிசீலனை செய்து முடிவெடுக்கும் அதிகாரம் வருமான வரி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் பரிசீலனை செய்யும் ரீபண்ட் தொகைக்கான வரம்பு 50 லட்ச ரூபாயிலிருந்து ஒரு கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 3 கோடி ரூபாய்க்கு அதிகமான ரீபண்ட் தொகை மீது முடிவெடுக்கும் அதிகாரம் தலைமை வருமான வரி அதிகாரிகள் வழங்கப்பட்டுள்ளது.