பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலமாக இதுவரை 9 கோடிக்கு மேற்பட்ட மக்கள் இலவச எல்பிஜி இணைப்புகள் பெற்றுள்ளார்கள். இந்த திட்டம் 2016 ஆம் வருடம் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தொடங்கப்பட்டது. உத்திரபிரதேச மாநிலத்தில் தகுதியுள்ள 1.75 கோடி குடும்பங்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் இலவச எல் பி ஜி சிலிண்டர் வழங்க இருப்பதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார் .

அதன்படி தீபாவளி மட்டும் ஹோலி பண்டிகையின் பொழுது வருடத்திற்கு இரண்டு முறை இலவச எல்பிஜி சிலிண்டர்களை வழங்க அரசு திட்டமிட்டு இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் நவம்பர் மாதம் தீபாவளி முன்னிட்டு எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்பட்டன .அதனைத் தொடர்ந்து பயனாளிகளுக்கு ஹோலி பண்டிகையிலும் சிலிண்டர் வழங்கப்பட உள்ளது. இதற்காக மாநில அரசு 2312 கோடி செலவு செய்வதாக கூறப்பட்டுள்ளது.