போக்குவரத்து துறை ஆனது சாலை விபத்துகளை தவிர்க்கும் விதமாக வாகன ஓட்டிகளை நவீன நுட்பத்தில் கண்காணிக்கும் விதமாக பல புதிய உத்தரவுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கர்நாடக மாநில போக்குவரத்து துறை வாகன ஓட்டிகள் தங்களுடைய வாகனங்களில் உயர் பாதுகாப்பு HSRP நம்பர் பிளேட் பொருத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இது கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அதிகம் பதிவு செய்யப்பட்ட நிலையில் 2019 ஆம் வருடத்திற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் வகையில் பழைய நம்பர் பிளேட்டுகள் உள்ளது. இதை மாற்றி புதிய நம்பர் பிளேட்டுகளை மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதற்கு இரண்டு முறை போதிய கால அவகாசம் வழங்கப்பட்ட பிறகும் பலரும் இந்த பணிகளை முடிக்காத நிலையில் தற்போது மே மாதத்திற்கு உள்ளாக அனைத்து வாகன ஓட்டிகளும் உயர் பாதுகாப்பு HSRP நம்பர் பிளேட்டுகளை மாற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு பதிவு செய்ய அரசு இணையதம் உள்ள நிலையில் சில போலியான இணையதளங்களில் ஸ்கேன் செய்து பணத்தை இழந்து விடும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது .இது குறித்து போக்குவரத்து அதிகாரிகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டும் நம்பர் பிளேட்டுகளை பதிவு செய்ய வேண்டும் என்று போலியான இணையதளங்களை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.