தமிழில் பட்டத்து யானை அனைத்து திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா அர்ஜுன். அதன்பிறகு சொல்லி விடவா படத்தில் நடித்த அதனை தொடர்ந்து நடிக்காமல் சினிமாவை விட்டு விலகினார் .இந்த நிலையில் காமெடி நடிகராகவும், குணசித்திர நடிகராகவும் பல படங்களில் நடித்து அசத்தி வரும் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் ஐஸ்வர்யாவுக்கும் கடந்த 28ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது .

இந்த நிலையில் தன்னுடைய வருங்கால மருமகள் ஐஸ்வர்யாவிற்கு மாமனார் தம்பி ராமையா முக்கியமான கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . அதாவது ஐஸ்வர்யா திருமணத்திற்கு பிறகு நடிக்க வரக்கூடாது என்று அவர் கண்டிஷன் போட்டுள்ளதாக கூறப்படுகிறது . இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.