
தர்மபுரி மாவட்டம் ஒட்டப்பட்டி வைத்திருந்தவர் அருண்குமார்(31). இவர் பிளாஸ்டிக் குடம் தயாரிக்கும் வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அருண்குமார் நந்தினி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் நிறை மாத கர்ப்பிணியாக இருந்த நந்தினி கடந்த மார்ச் மாதம் 20-ஆம் தேதி தர்மபுரி பூங்கா அருகே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது மருத்துவருக்கு பதிலாக நந்தினிக்கு செவிலியர் ஊசி போட்டதாக தெரிகிறது.
அதன் பிறகு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நந்தினி தர்மபுரி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்து பார்த்தபோது நந்தினி வயிற்றில் இருந்த இரட்டை குழந்தைகள் உயிரிழந்தது தெரியவந்தது.
நந்தினி நலமுடன் உள்ளார். இந்த நிலையில் தன்னுடைய இரட்டைக் குழந்தைகள் இறப்பிற்கு தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியம் தான் காரணம் என அருண்குமார் காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.