வயலில் வைரக்கல் கிடைத்ததால் பெண் கூலி தொழிலாளி மகிழ்ச்சி அடைந்தார். 

ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள வயல்களில் மழைக்காலத்தில் வைர கற்கள் கிடைப்பது வழக்கம். இந்த நிலையில் பொன்னகிரியில் இருக்கும் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த கூலி தொழிலாளி பெண்ணுக்கு வைரம் கிடைத்தது.

இதனை அந்த பகுதியில் வசிக்கும் நகை வியாபாரி இரண்டு லட்ச ரூபாய் பணம் மற்றும் 10 கிராம் தங்கம் கொடுத்து வாங்கி சென்றார். இதனால் பெண் கூலி தொழிலாளி மகிழ்ச்சி அடைந்தார். இதனை அறிந்த அந்த ஊர் மக்கள் வயல்வெளியில் போட்டி போட்டுக் கொண்டு வைரத்தை தேடி வருகின்றனர்.