
தெலுங்கானா மாநிலம் ராஜண்ணா சிர்சில்லா மாவட்டத்தில் உள்ள சந்துர்த்தி மண்டல மையத்தில் ஒரு பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வயலில் வேலை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த தர்ஜகா என்ற பெண்மணி, சாலையின் நடுவே அடையாளம் தெரியாத நபரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மே 25 ஆம் தேதி நடைபெற்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட நபர், கொலையைக் செய்த பிறகு நேரடியாக காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார். இந்நிலையில், காவல் நிலையத்தில் இருந்து ஒரு காணொளி வெளியாகியுள்ளது. அந்தக் காணொளியில், சட்டையும் ஷார்ட்ஸும் அணிந்திருந்த அந்த நபர், அரிவாளை தரையில் வைத்தபடி, போலீசாருக்கு முன்னிலையில் நிற்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அவர் நான் கொலை செய்துவிட்டதாக கூறுகிறார்.
బ్రేకింగ్ న్యూస్
రాజన్న సిరిసిల్ల జిల్లా చందుర్తి మండల కేంద్రంలో మహిళ దారుణ హత్య
పొలం పనులకు వెళ్లి నడుచుకుంటూ ఇంటికి వెళ్తున్న మహిళను నడి రోడ్డుపై దారుణంగా కత్తితి నరికి చంపిన గుర్తుతెలియని వ్యక్తి
దర్జాగా హత్య చేసి.. ఆమెను చంపింది నేనే అంటూ పోలీస్ స్టేషన్లో లొంగిపోయిన… pic.twitter.com/XdVUqBaCZP
— Telugu Scribe (@TeluguScribe) May 26, 2025
இவரது பெயரும், கொலையின் காரணமும் இன்னும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. ஆனால், முன்பு கணேஷ் சதுர்த்தி நாளன்று ஒருவர் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் இவர் தொடர்புடையவராக இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த கொடூரக் கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.