நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று  மீண்டும் பாஜக ஆட்சி அமைத்த நிலையில் பிரதமராக மோடி பதவியேற்றுள்ளார். அதன் பிறகு காங்கிரஸ் சார்பில் ரேபேலி மற்றும் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட நிலையில் அவர் இரு தொகுதிகளிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இருப்பினும் ஏதேனும் ஒரு தொகுதியில் மட்டும் தான் எம்பியாக தொடர முடியும் என்பதால் ஏதேனும் ஒரு தொகுதியில் ராகுல் காந்தி கண்டிப்பாக ராஜினாமா செய்ய வேண்டும்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் உள்ள வயநாடு தொகுதிக்கு வந்த ராகுல் காந்தி எந்த தொகுதியில் எம்பியாக தொடர வேண்டும் என்பதை மக்களை கேட்டு முடிவு செய்வேன் என்று கூறினார். இந்நிலையில் ராகுல் காந்தி வயநாடு தொகுதியா அல்லது ரேபேலி தொகுதியா என்பது குறித்து விரைவில் முடிவு செய்து அறிவிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அவர் ரேபேலி தொகுதியில் எம்பியாக தொடர் அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் வயநாடு தொகுதியில் அவர் ராஜினாமா செய்தால் அந்த தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. மேலும் ராகுல் காந்தியின் முடிவு நாளை அதாவது ஜூன் 17ஆம் தேதி தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.