வண்டலூரில் அரசு பேருந்தில் ஏறிய முதியவர் முதியோர் இருக்கையில் அமர்ந்துள்ளார். அப்போது நடத்துனர் அந்த இருக்கையில் அமரக்கூடாது என கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

இதனால் கோபமடைந்த நடத்துனரும் டிரைவரும் சேர்ந்து அந்த முதியவரை கீழே இறக்கி சரமாரியாக தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்தது.

தற்போது முதியவரை தாக்கிய ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஆகிய இருவரையும் மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் பிரபு சங்கர் பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.