
பாஜக நிர்வாகியான அமர் பிரசாத் ரெட்டி என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்தனர். ஏனென்றால் வாலிபர் ஒருவர் சுத்தியலை வைத்து வந்தே பாரத் ரயிலின் ஜன்னல் கண்ணாடியை உடைக்கிறார். அந்த காட்சிகள் வீடியோவில் இடம் பெற்றுள்ளது.
இதனை பார்த்த நெட்டிசன்கள் சம்பந்தப்பட்ட வாலிபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். மேலும் வீடியோவை வெளியிட்ட அமர் பிரசாத் ரெடி கட்டாயம் வாலிபருக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகவில்லை.